கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

வெளளவத்தை பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரள இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமது அமைச்சிற்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை, வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தமையால், இருவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்திருந்த அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அக்கட்டிடத்தின் […]

Continue Reading

வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து சடலம் மீட்பு

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கடந்த 18ஆம் திகதி காலை இடிந்து விழுந்தது. இந்த அனர்த்தம் காரணமாக ஏற்கனவே ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர் இன்று பகல் குறித்த இளைஞரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், குறித்த இடிபாடுகளுக்குள் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Continue Reading

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டது வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடம்

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடம் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.அனுர தெரிவித்துள்ளார். இயற்கை கால்வாய்க்கு அருகில் இவ்வாறான கட்டிடங்களுக்கு கட்டாயமாக அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் கால்வாயோரம் வரை அனுமதியின்றி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தையிலுள்ள திரையரங்கொன்றிற்கு அருகிலிருந்த குறித்த 5 மாடி வைபவ மண்டபம் நேற்று முன்தினம் (18) சரிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading