யாழ் தொடரூந்து விபத்தில் உயிர் தப்பினார் வைத்தியர்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் கார் ஒன்றை மோதித்தள்ளியது தொடரூந்து. பலத்த சேதத்திற்கு உள்ளான கார் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Continue Reading

அரசியலுடன் சம்பந்தப்படாத குடும்பத்தினர் இலக்கா!

அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும்   போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாஜூதீன் கொலை வழக்கு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் […]

Continue Reading

குற்றப்புலனாய்வின் உத்தரவை மீறி நழுவிய ஷிரந்தி-யோசித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரையும், ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் வேறொரு நாளில் விசாரணைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading