அமெரிக்காவில் நடுவானில் விமான என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்,09 அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு போயிங் 737 விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் அருகே தடுப்பாக இருக்கும் தகடு பிய்ந்து காற்றில் பறந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் டென்வர் விமான நிலையத்துக்கே திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த […]

Continue Reading

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

மாஸ்கோ,09 ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரில் உள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கான்பெரா,08 ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிட்னி நகரில் ரெயில் தண்டவாளத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிட்னி நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள வாரகம்பா அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் […]

Continue Reading

ஆயுள் ரகசியம் பகிர்ந்த 111 வயது முதியவர்

உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு […]

Continue Reading

தென்கொரியா: 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றி

சியோல்,08 கொரிய அரசுகள், ராணுவ பதற்றங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன. ஆனால், அதனை இரு நாடுகளுமே காற்றில் பறக்க விட்டு விட்டன. ஒப்பந்த மீறலில் ஈடுபடும் வகையில் இரு நாடுகளுமே நடவடிக்கைகளை மேற்கொண்டன. வடகொரியா கடந்த ஆண்டு நவம்பரில் ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்பியதும் தீபகற்ப பகுதியில் பதற்ற நிலை அதிகரித்தது. வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் தொடர்ந்து ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்புவது என திட்டமிட்டுள்ளது. […]

Continue Reading

பாலின மாற்று அறுவை சிகிச்சை மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தல்: வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி:08 பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஆகியவை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் அறிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் […]

Continue Reading

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

டோக்கியோ,08 ஜப்பான் நாட்டின் மியசாகி மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மியசாகி மாகாணத்தின் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த புதன்கிழமை தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது […]

Continue Reading

பாலின மாற்று அறுவை சிகிச்சை, வாடகை தாய் மனித கண்ணியத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: வாடிகன்

பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், பாலின கொள்கை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் தெரிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறுவதாகும். கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட கண்ணியம் தொடர்பான அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாலின கோட்பாடு […]

Continue Reading

இந்திய தேசியக்கொடிக்கு அவமதிப்பு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலே,08 இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மாலத்தீவு முன்னாள் மந்திரி மரியம் ஷியுனா. தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றாக ‘மிகப்பெரும் பின்னடைவை […]

Continue Reading

வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்: அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து போனதாக கான் யூனிஸ் மக்கள் வேதனை

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் படிப்படியாக தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்த தொடங்கியது. பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் எங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது. […]

Continue Reading

மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து: 90க்கும் மேற்பட்டோர் பலி

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது. இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்,” படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த […]

Continue Reading

அமெரிக்க நடிகர் மர்மச்சாவு

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (வயது 27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய போலீசார் […]

Continue Reading