மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் ரோகித் சர்மா? முன்னாள் வீரர் தகவல்

மும்பை:04 ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது குறித்து […]

Continue Reading

டெல்லி அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா […]

Continue Reading

சி.எஸ்.கே Vs கே.கே.ஆர்- வரும் 5ம் தேதி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 5ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் ஆன்லைனில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் […]

Continue Reading

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியை தவறவிடும் முஸ்தஃபிசுர் ரஹ்மான்

சென்னை:03 நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வரும் 5-ம் தேதி […]

Continue Reading

16 வருசமா இதை தான் செய்றாங்க.. ஆர்சிபி-யின் தவறை சுட்டிக்காட்டிய அம்பதி ராயுடு

ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டியில் லக்னோ – பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி […]

Continue Reading

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: 4வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை

துபாய்:03 வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர். இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது. புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் […]

Continue Reading

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு

விசாகப்பட்டினம்:03 ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி […]

Continue Reading

மயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபி: 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

பெங்களூரு:03 ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். […]

Continue Reading

சிகிச்சைக்கு இடையே புற்றுநோயாளியை உற்சாகப்படுத்த நடனமாடிய நர்ஸ்

புற்றுநோயாளி ஒருவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவருடன் நர்ஸ் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. கொலம்பியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன் என்ற நோயாளிக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக அந்த வார்டு முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த வார்டில் உள்ள படுக்கைகளில் நோயாளிகள் அமர்ந்திருக்கும் நிலையில் ஜேசனுக்கு ஹீமோதெரபி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகளும், தொடர்ந்து […]

Continue Reading

லக்னோவுக்கு எதிராக ஆர்சிபி பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு:02 17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி 2-ல் தோல்வி என புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. லக்னோ […]

Continue Reading

இலங்கை – பங்களாதேஷ்: நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 268 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பங்களாதேஷ், இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது. அதேநேரம், […]

Continue Reading

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் டோனியின் சாதனைகள்

விசாகப்பட்டினம்:01 ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை […]

Continue Reading