பட்டதாரி பயிலுனர்கள் ஒரு வருடம் பூர்த்தி – நிரந்தர நியமனத்தினை வழங்குங்கள்

ஐம்பத்தி மூவாயிரம் பட்டதாரி பயிலுனர்களுக்கு உடனடியாக 2021.09.03ம் திகதியிடப்பட்டு பட்டதாரி பயிலுனர் ஒரு வருட பூர்த்தி என்று நிரந்தர நியமனத்தினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர் எல்.எம்.அஷ்ரப் தெரிவித்தார். ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரின் ஊடக சந்திப்பு வாழைச்சேனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற […]

Continue Reading

யாழ் நாக விகாரை பகுதியை புனித பிரதேசமாக மாற்ற வேண்டும் – விகாராதிபதி

ஆரியகுள பகுதியை ஒரு புனித பிரதேசமாக மாற்ற வேண்டும். விகாரையுடன் சம்பந்தப்பட்ட குளம் என்பதால் எம்முடனும் கலந்தா லோசித்திருக்கலாம் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார் யாழ்ப்பாணம் ஆரியகுள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு […]

Continue Reading

வடக்கில் செப்ரெம்பர் மாதத்தில் மாத்திரம் கொரோனா தொற்றினால் 348 பேர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஒக்டோபர் முதலாம் திகதியான நேற்று வடக்கு மாகாணத்தில் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 776 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 152 பேர் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 467 தொற்றாளர்கள் […]

Continue Reading

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை – மணிவண்ணன்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக இன்று ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்களுக்கும் சமூகவலைத்தள நண்பர்களுக்கும் நன்றிகள். செய்திகளில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி எழுதி எனது பெயரை மக்களின் மனங்களில் […]

Continue Reading

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த தினம் யாழில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் மற்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.  விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  வைத்திய சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.  […]

Continue Reading