சுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார். சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்தின் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கையர்கள் வரையில் வசிக்கின்ற நிலையில், அவர்கள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கான தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மூன்று வருடத்தில் தீர்வு – சுவாமிநாதன்

இன்னும் 3 வருடங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைளகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை (12.07) யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களாக இருந்து சமூதாயத்திற்கு கடமை செய்ய வேண்டும். மாங்குளத்தில் பொருளாதார வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொருளாதார வலயத்தினை ஆரம்பித்தால், வடக்கில் […]

Continue Reading

சிறைச்சாலை திணைக்கள உயர் பதவிகளில் மாற்றம்?

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் பதவிகள் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் நால்வர் தப்பி ஓடியமை தொடர்பில் ஆராய, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போதே மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் சிறைச்சாலை சுவர்களில் துளையிட்டு தப்பிச் சென்றவேளை, அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுத்த விதம் குறித்து தான் அதிர்ச்சியடைவதாகவும், இந்த சம்பவத்திற்கு நீர்கொழும்பு […]

Continue Reading