உலகின் மிகப்பெரிய வைரம் ஏலத்தில் விற்பனை

உலகச் செய்திகள் செய்திகள்

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டதாக கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

குறித்த வைரத்தின் எடை 1,109 கரட்டாகும். இந்த வைரம் 3,106.75 கரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு கரட்டிற்கு 47,777 டொலர்கள் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது.

இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுத்தனர். இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானதெனத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் தெரிவிக்கையில், பழமையான இந்த வைரமானது மிகவும் பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டைத் தீட்டப்படுமெனத் தெரிவித்துள்ளார்.