இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி வெளிப்படுத்திய தடுமாற்றத்தைத் தொடர்ந்தே இவ்வாறு குறிப்பிட்டார் சேவாக்.
‘இங்கிலாந்தில் இந்திய அணி அண்மையில் வெளிப்படுத்திய தடுமாற்றம் அணிக்குள் டோனியின் அவசியத்தை உணர்த்தியது. அடுத்த உலகக்கிண்ணத் தொடர் வரை இந்திய அணிக்காக டோனி நிச்சயம் விளையாட வேண்டும். டோனியின் அனுபவ முதிர்ச்சி இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றிகளைக் குவிக்க உதவிசெய்யும்’ என்று சேவாக் மேலும் தெரிவித்தார்.