சீனா செல்கிறார் பிரதமர் தினேஸ் குணவர்தன

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சீன பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 25ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன எதிர்வரும் 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.