அம்பாறையில் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கி நால்வர் காயம்!

முக்கிய செய்திகள் 1

அம்பாறை மூவங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெப் வண்டி ஹிங்குராணையிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் அதன் டயர் ஒன்று வெடித்ததால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதன்போது கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.