100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்!

முக்கிய செய்திகள் 2

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (26) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென் மாகாணம் மற்றும் மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.