யாழ் போதனா வைத்தியசாலையில் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை: பிரதிப் பணிப்பாளர் தகவல்!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக்கில் கடந்த வருட இறுதியில் மட்டும் சுமார் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் சுகாதாரத்துறை தொடர்பான விடையதானங்களில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேல தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தின் சனத் தொகை சுமார் 6 இலட்சத்து 27 ஆயிரம் பேராகக காணப்படுகின்ற நிலையில் கடந்த வருட இறுதியில் மட்டும் யாழ் போதன வைத்தியசாலையின் கிளினிக்கில் 6 இலட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.