வெங்காயம் – வெள்ளை அரிசியின் விலை குறைப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சதொச நிறுவனம் மேலும் இரண்டு பொருட்களின் விலையை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.

அத்துடன், வெள்ளையரிசி ஒரு கிலோ கிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் புதிய விலை 185 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.