ஐ.பி.எல்: பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

லக்னோ,13

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.