சிட்னி கத்திக்குத்துச் சம்பவம் – இலங்கையில் இருந்து சென்றவர் பலி!

முக்கிய செய்திகள் 3

அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், இலங்கை ஊடாக அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொண்டி சந்தி வெஸ்ட்ஃபீல்டில், பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான பராஸ் தாஹிர் கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரேயொரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பராஸ் தாஹிர், பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

பாகிஸ்தானிய அரசியலமைப்பின் கீழ், அஹ்மதியா சமூகம் முஸ்லீம் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டு, வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன், மத நம்பிக்கைகள் காரணமாக அவர்கள் தேர்தல்களிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையிலேயே பராஸ் தாஹிர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இலங்கையின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.