பலத்த மின்னல் தாக்கமும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் வாய்ப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பலத்த மின்னல் தாக்கமும் இடியுடன் கூடிய பலத்த மழையும் பல பிரதேசங்களில் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.