பிரபல ரெப் இசை பாடகர் டுமேஜ் சலேஹிக்கு மரண தண்டனை

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல ரெப் இசைப் பாடகர் டுமேஜ் சலேஹிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரானில் மஹ்சா அமினியின் மரணம் பேசுபொருளாக மாறிய நிலையில், ஈரான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
மஹ்சா அமினியின் மரணத்தால் தூண்டப்பட்ட ஈரான் தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்தமைக்காகவே, பிரபல ரெப் இசைப் பாடகர் டுமேஜ் சலேஹிக்கு ஈரானிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டுமேஜ் சலேஹி கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.