இலங்கையின் பால் உற்பத்தியை நவீனமயமாக்க அமெரிக்கா ஒத்துழைப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையின் விவசாயத் துறைக்கான USDA ஆதரவு குறித்து கலந்துரையாடினர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் படி, துணைச் செயலர் டெய்லரின் விஜயமானது, இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், அதிக உணவுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும், காலநிலை சவால்களுக்கு எதிரான மீள்தன்மையை அதிகரிப்பதற்கும் அமெரிக்க மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்றைய துணைச் செயலாளரின் கலந்துரையாடல்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் 2024 முன்னேற்றத்திற்கான உணவு முயற்சியில் முன்னுரிமை நாடாக இலங்கையின் முக்கிய பங்கை உறுதிப்படுத்தியது. இலங்கையில் 15,000க்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்களுக்கு பால் உற்பத்தியை மேம்படுத்த உதவிய 27.5 மில்லியன் டாலர் சந்தை சார்ந்த பால் உற்பத்தித் திட்டமானது முதன்மையான கவனம் செலுத்துவதாகும். இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி இரட்டிப்பாகும் எனப் பலர் தெரிவிக்கின்றனர். USDA இன் பால் பண்ணை திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் தேவையற்ற ஆற்றல் நுகர்வு குறைக்கும் தீவன நுகர்வு உத்திகள் பற்றிய விரிவான பயிற்சியை வழங்குவதன் மூலம் பால் பண்ணையாளர்களிடையே காலநிலை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.