பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை!

முக்கிய செய்திகள் 2

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை அறிக்கையை அமைச்சரவை உபகுழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்கு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால்அரச பல்கலைக்கழக அமைப்பு முறையில் பாரிய தொழில்சார் பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான அமைச்சரவை அறிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.