காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் வருகின்ற 13ம் திகதி (13/05/2024) முதல் ஆரம்பமாகும் என தமிழக கடலோர அதிகார சபை (Tamil Nadu Coastal Authority) அறிவித்துள்ளது.

இதற்கான "சிவகங்கை" கப்பல் மாலைதீவில் இருந்து நாளை மறுதினம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு முன்னேற்பாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் TNCAஇன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சேவைக்கான இரு வழிக் கட்டனமாக 114/-அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பயணியும் 100kg எடையுடைய பொதிகளை எடுத்து செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடல் கோந்தளிப்பு கால நிலையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கப்பல் சேவையை இலங்கை ஜனாதிபதி றணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரச மட்ட தலைவர்கள் குழாம் காங்கேசன்துறை துறைமுகத்தில் அன்றைய தினம் சம்பிராய பூர்வமாக வரவேற்பார்கள் என இலங்கை அரச‌ தகவல்கள் தெரிவிக்கின்றன…

பயண ஒழுங்குகளுக்கும், முன் பதிவிற்கும் வரும் 1ம் திகதியில் இருந்து:
Madura Travel Service
25-3,Gandhi Irwin road
Egmore-Chennai
INDIA
91-9841691234.
….
Metro Travels
574, Hospital Road
Jaffna-Sri Lanka.
94-774720270.