Onmax DT பணிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

முக்கிய செய்திகள் 1

Onmax DT பிரமிட் முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்தை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட Onmax DT நிறுவனத்தின் 04 பணிப்பாளர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

அப்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தவை பிறப்பித்துள்ளார்.