ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி: வேட்புமனுவில் தகவல்

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
சொந்த வாகனம் கிடையாது.
அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.
வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.
3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.
15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.
4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.
9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.
தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி- வேட்புமனுவில் தகவல்