யாழில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்கலம் முற்றுகை!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்கலமொன்று பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சிகள் வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கொல்லப்பட்ட நிலையில் நான்கு மாடுகளையும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து சந்தேகநபரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இருந்தும் குறித்த கொல்கலத்துக்கு மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நீண்டகாலமாக குறித்த கொல்கலம் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மாடுகளை கொல்வதற்கு வைத்திருந்த ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.