ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்

முக்கிய செய்திகள் 3

நாட்டின் பொருளாதார செயல் திட்டம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன்போதே அவர் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஜோர்ஜியா சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா மேலும் வலியுறுத்தியுள்ளார்.