சிங்கப்பூரில் இருந்து 5 நிபுணர்களை கொண்ட குழு இலங்கைக்கு..?

செய்திகள் முக்கிய செய்திகள் 3

சிங்கப்பூரில் இருந்து 5 நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசா வழங்கும் முறைமையை ஆராய்வதற்காக வருகை தரவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 
 
இன்று காலை (06) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 
 
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய விசா முறை தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 
 
அத்துடன், விசா கட்டண விவகாரமும் நிறைவேற்றப்பட்ட யோசனையின் ஒரு பகுதியாகும். 
 
இவ்வாறு நவம்பர் மாதம் யோசனை நிறைவேற்றப்பட்டாலும் ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகார முறைமை மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.
 
எனவே, VFS முறைமை மூலம் அதைச் செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
 
அத்துடன் சிங்கப்பூரில் இருந்து 5 நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசா வழங்கும் முறைமையை ஆராய்வதற்காக வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.