Full-ஆ Fire.. அனல் தெறிக்கும் லியோ புது போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு […]

Continue Reading

அபிவிருத்தி இலக்குகளை அடைய உலக முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமாக இல்லை: ஜனாதிபதி ரணில்!

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12% சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும் ஏனைய முக்கியமான இலக்குகளில் 30% சதவீதத்தை இன்னும் அடைந்துகொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) ஆரம்பிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளால் 2015 […]

Continue Reading

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (20) புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறையில் நிலவிவரும் நெருக்கடிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாதத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Continue Reading

மன்னாரில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு தீர்வை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனைக்காக கொழும்பு மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த நிலையிலேயே உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவனர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட […]

Continue Reading

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

கொழும்பு,செப் 20 இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

ஜனாதிபதி ரணில் ஈரானிய ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டார்.

Continue Reading

ஏப்ரல் 21 தாக்குதல் – அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இது தொடர்பில், வினவினார். அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் பற்றிய சில காணொளிகள் […]

Continue Reading

இலங்கை சபாநாயகர் – பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளித்தமை தொடர்பில் பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி இதன்போது […]

Continue Reading

மட்டக்களப்பு உறுகாமம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம்: மக்கள் சிரமம்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள் தோட்டங்கள் மின்சார கம்பங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் காட்டு யானைகள் அழித்து நாசமாக்கியுள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரத்திற்காக அமைத்துள்ள சிறு அங்காடிகளையும் சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்போது பொதுமக்கள் மயிரிழையில் உயிர் தப்பி காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக எமது செயதியாளர் தெரிவித்தார். செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் காட்டு யானைகள் அங்கிருந்த மின்சார வேலிகளையும் உடைத்து ஊருக்குள் […]

Continue Reading

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு மேல்நீதிமன்றம் விதித்த தண்டனை!  

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை  மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  […]

Continue Reading

வவுனியாவில் கல் அகழ்வுப்பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

வவுனியா சின்ன வளாத்திக் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை தகர்த்து கல் அகழ்வுப்பணியை முன்னெடுப்பதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கதிரவேலர், பூவரசன்குளம் கமநல சேவைகள் அமைப்பின் விவசாயிகளே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலைய வாயிலை பூட்டி விவசாயிகள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

தாதி வேலையில் விலகிய நிலையில் சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

தாதி ஒருவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 250,000 ரூபா வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்கள் ஹடரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த தாதி கடந்த மார்ச் மாதம் திடீரென வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வேறு வேலைக்காக சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து ஹடரலியத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தாதி சேவையை விட்டு வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்படவில்லை என […]

Continue Reading