இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடித்ததால் பதட்டம்: அமைச்சர் தலையீட்டால் கட்டுக்குள் வந்தது

யாழ்ப்பாணம், பெப் 1: பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்தனர். அப்போது, இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க அப்பிரதேச மீனவர்கள் முயற்சித்தனர். இதனால், அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு கடற்படையினரை அனுப்பி வைத்ததுடன்,  கடற்றொழிலாளர்களையும் ஆறுதல்படுத்தி கரைக்கு திருப்பி அழைத்தார். இந்நிலையில், கடற்படையினரால் இரண்டு இந்தியப் மீன்பிடிப் படகுகள் […]

Continue Reading

இந்தியக் கடல்தொழிலாளர்கள் அடாவடி: அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம், பெப் 1: எல்லை தாண்டி, சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும், உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கும் வகையிலும் விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அடாவடியால் பாதிக்கப்பட்டுள்ள வடமாராட்சி கடற்றொழிலாளர்கள், மருதங்கேணி பிரதேச செயலகத்தை வழி மறித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில் […]

Continue Reading

ஆட்டோ, ரயில் மோதி மூவர் பலி

கொழும்பு, பெப் 1: காலி ரத்கமவில் செவ்வாய்க்கிழமை காலை ஆட்டோ ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசலை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு, பெப் 1: இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசலை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 40,000 மெட்ரிக் டன் டீசல், 40,000 மெட்ரிக் டன் பெட்ரோலை கொள்முதல் செய்யவது தொடர்பாக, எரிசக்தி அமைச்சகம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, 40,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றுமதி செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக, எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Continue Reading

சதொசவில் பெரிய தேங்காய் ஒன்று ரூ.75 க்கு விற்பனை செய்யப்படும்: பந்துல குணவர்தன

கொழும்பு, ஜனவரி 31: அரசுக்கு சொந்தமான லங்கா சதொசவில் பெரிய தேங்காயொன்று அதிகபட்ச சில்லறை விலையாக ரூ. 75க்கு திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: லங்கா சதொசவில் தேங்காய் விற்பனை செய்வது தொடர்பாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சதொச விற்பனை நிலையங்களி,ல் நுகர்வோர் ஒருவர் ஒரு நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்ய […]

Continue Reading

12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலர் பிரிவுகள் தேசிய டெங்கு வலயங்களாக அறிவிப்பு

கொழும்பு, ஜனவரி 31: நாட்டில் டெங்கு நோய் பரவல் அபாயம் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகள் ‘தேசிய டெங்கு வலயங்க’ளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவால் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலர் பிரிவுகள் தேசிய டெங்கு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 ஆம் […]

Continue Reading

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு கொரோனா பாதிப்பு

கொழும்பு, ஜனவரி 31: இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் நுவான் துஷாரா இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில் ‘நுவான் துஷாராவுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது தனிமைப்படுத்தல் காலம் பெப்ரவரி 5ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்றனர். எனினும், இலங்கை அணி […]

Continue Reading

சமுதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளர் நியமனம்

கிளிநொச்சி, ஜனவரி 31: பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேபினட் அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராகவும் உள்ள “சமுதாய மேம்பாட்டு” துறையின் வன்னி தேர்தல் தொகுதி இணைப்பாளராக பா. வினோத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் யாழ்ப்பாணத்தில் வைத்து வினோத்திடம் வழங்கினார். இது தொடர்பாக பா.வினோத் கூறுகையில் “வன்னி தேர்தல் தொகுதியில் சமுதாய மேம்பாடு எங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதை அடையாளம் கண்டு அதை அமைச்சர் மற்றும் அமைச்சங்களின் பார்வைக்கு கொண்டு செல்வதுடன், […]

Continue Reading

டொலர் நெருக்கடியால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விடுவிப்பதில் சிக்கல்

கொழும்பு, ஜனவரி 31: இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால், இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதில் நீண்டகால தாமதம் நிலவுகிறது. அப் பொருட்களில், ‘ஆபத்தான சரக்குகள்’ என வகைப்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும் என்று விபரமறிந்த தரப்பினர் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் “நாட்டில் அமெரிக்க டொலருக்கு தட்டுப்பாடு நிலவுவதால், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பல கொள்கலன்களை விடுவிப்பதில் சிக்கல் நிலவுகிறது. சில பொருட்கள் மாதக் கணக்காக துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அப் பொருட்களில், […]

Continue Reading

ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் நடால்

மெல்பேர்ன், ஜனவரி 30: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 4 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்து நடால் வெற்றி பெற்றார். இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற […]

Continue Reading

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை அரசு முறியடிக்கும்: டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை

யாழ்ப்பாணம், ஜனவரி 30: நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை” கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் […]

Continue Reading

ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் ஆஷ்லே பார்டி வெற்றி

மெல்பேர்ன், ஜனவரி 29: ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் 27-ம் நிலை வீராங்கனையான டேனிலே கோலின்ஸை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-3 என ஆஷ்லே பார்டி எளிதாக கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் கோலின்ஸ் கடும் நெருக்கடி […]

Continue Reading