முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – இந்திய அணி வெற்றி!

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(17) இடம்பெற்றது. ஜொஹனஸ்பேர்க்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, அந்த அணி 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில், அதிகபடியாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ஓட்டங்களையும், டோனி டி ஜோர்ஸி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 25க்கும் […]

Continue Reading

ஆசியக் கிண்ண கிரிக்கெட்: பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில், Ashiqur […]

Continue Reading

விடைபெறும் கோபால் பாக்லே – புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச் செல்வதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2020 மே மாதம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாக அவர் […]

Continue Reading

ஆசிய அளவில் பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய்!

2023ஆம் ஆண்டில் ஆசிய அளவில் பிரபலமானவர்களில் பட்டியலை லண்டனின் பிரபல வார இதழான ஈஸ்டர்ன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய திரைப்பட கலைஞர்களும் இடம்பெற்றுள்ளனர் . இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பொலிவூட் நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அத்துடன், பொலிவூட் நடிகைகளான ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர். இந்தநிலையில், இந்த பட்டியலில் […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம் – திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் காணப்படுகின்றது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் […]

Continue Reading

கனமழை எதிரொலி- தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான […]

Continue Reading

அவுஸ்திரேலியாவில் நடந்த தமிழ் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்!

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் அரசாங்கம் நடத்திய உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து கணிசமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். விக்ரோரியன் தமிழ் சங்கப் பாடசாலையில் மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழை மறவாது தமிழ் உணர்வுடன் வாழும் சிறுவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். மதுஷன் சுந்தரமோகன் (50 புள்ளிகள்)-மாநிலத்தில் முதலாமிடம், செல்வி கிரிஷா ரேகா (50 புள்ளிகள்), திவ்வியா தேவபாலன் (48 புள்ளிகள்), சுவாதி சுஜேந்திரன் (44 புள்ளிகள்),திவ்வியா […]

Continue Reading

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் கைது!

பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரைக் கைது செய்துள்ளதுடன், சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுருகிரிய, கடவத்தை, தலங்கம மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட 18 இடங்களில் கொள்ளையிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 29, 32 மற்றும் 36 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அங்கொட மற்றும் கடுவெல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். அவர்களுக்கு எதிராக […]

Continue Reading

இலங்கையின் பொருளாதார – அரசியல் ஸ்திரத்தன்மை பிராந்திய நலன்களுக்கு முக்கியமானது – கோபால் பாக்லே

இலங்கையின் பொருளாதார – அரசியல் ஸ்திரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, பிராந்திய நலன்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் நிச்சயம் பிராந்தியத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மூன்று ஆண்டு கால இந்திய இராஜதந்திர சேவையை வெள்ளிக்கிழமையுடன் உத்தியோகபூர்வமாக […]

Continue Reading

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – செந்தில் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினர். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

மகாராஷ்ராவில் வெடிவிபத்து – 9 பேர் பலி

மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Continue Reading