நாரம்மல காவல்துறையின் 02 உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்

நீர்கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சொத்துக்கள் மற்றும் உடமைகள், திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காத நாரம்மல காவல்துறையின் இரண்டு உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சொத்துக்கள் மற்றும் உடமைகள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த 30 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் […]

Continue Reading

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

இராணுவத் தளபதிகளின் உணவுச் செலவுகள் குறித்து வெளிவந்த செய்தியில் உண்மையில்லை

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் செயற்பாடுகளை பார்வையிட வந்த இராணுவ வீரர்கள் குழுவிற்கு உபசரிப்பதற்காக பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியில் வெளிநாடுகளைச் சேர்ந்த 25 அதிகாரிகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 123 இராணுவ அதிகாரிகள் உட்பட 148 உயர் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றியதாக அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையானது; […]

Continue Reading

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினையை 24 மணித்தியாலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுத்த செந்தில்!

ளப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித , விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ஆதலால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவும், கிராமத்திற்கான பாதைகள் கடும் மோசமான நிலையில் உள்ளதாகவும், வைத்தியசாலைக்கு உதவியாளர்களை நியமித்து […]

Continue Reading

இலங்கையில் இருந்து தினமும் 200 டெங்கு நோயாளர்கள்

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும், கொடதுவ, மஹரகம, நுகேகொட பிரதேசங்களிலும், கம்பஹா, அத்தனகல்ல, பியகம ஆகிய பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் முறைசாரா கழிவுகளை அகற்றுவதும், கொசுக்கள் பெருகும் இடங்களை பராமரிப்பதும் டெங்கு […]

Continue Reading

கடன் கிடைத்தாலும் மறுசீரமைப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு – ஹர்ஷ

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பணவு தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இரண்டாம் கடன் தவணை கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தின் […]

Continue Reading

பாலியல் கல்வி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் ஜீவன்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்த வேண்டும் அப்போது தான் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு […]

Continue Reading

வேலை நிறுத்தங்களால் இழக்கப்பட்டுள்ள 17,095 மனித நாட்கள்

2022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் துறையின் செயல்திறன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில், 22 வேலைநிறுத்தங்கள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 5,558 தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும், மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களின் தொழிலாளர் அலுவலர்கள் 79,700 தொழிலாளர் ஆய்வுகளையும், பெண்களின் இரவுப் பணி தொடர்பான பணி நிலைமைகள் குறித்து 193 ஆய்வுகளையும், குழந்தைத் தொழிலாளர் […]

Continue Reading

சர்ச்சைக்குரிய நிகழ்வை மீண்டும் நடத்த யாழில் கோரிக்கை!

யாழ்ப்பாண நகரில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஓர் விடுதியில் இடம்பெற்று சர்ச்சையை உருவாக்கிய களியாட்ட நிகழ்வை(DJ night) ஒத்த நிகழ்விற்கு மற்றுமோர் அனுமதி யாழ் மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் இடம்பெற்ற நிகழ்வில் சமயம் ,கலாசார, விழுமியங்களை பாதிக்காத வகையில் சட்டத்திற்கு உட்பட்டவாறு நிகழ்வுகளை நடாத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியதன் பெயரில் விடுதி உரிமையாளரும் இடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வில் மது விருந்து இடம்பெற்றதோடு சிறுமிகளும் பங்குகொண்டமை கண்டுகொள்ளப்பட்டதனால் […]

Continue Reading

கொலையில் முடிந்த ஹோட்டல் விருந்து!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (04) இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார். உயிரிழந்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் விருந்தின் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் அவரை தாக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிரான தொடரின் தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் டிசம்பர் 10 முதல் ஆரம்பமாகவுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாவது இந்தியாவுக்கு எதிரான ரி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க […]

Continue Reading

தாய்லாந்து பணயக் கைதிகள் 6 பேரை விடுதலை செய்தது ஹமாஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். பலரை கொன்று குவித்ததுடன், சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா முனையை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலகளை நடத்துகின்றனர். இதில் 15 […]

Continue Reading