சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. அத்துடன், பாறைகள், கடல் புற்கள் ஆகியவை வெளியே தெரிந்தன. காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்றும், சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Continue Reading

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கலைத்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தற்போது அன்வர் உல் ஹக் காகர் காபந்து பிரதமர் பொறுப்பில் இருந்து வருகிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்ட அதிகரிகள் நியமனத்தை லாகூர் ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், லாகூர் கோர்ட்டின் உத்தரவை நேற்று இரவு […]

Continue Reading

கேப்டனை மாற்றிய மும்பை அணி: சென்னை அணிக்கு அடித்த லக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியபோதே, அவர் ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், நேற்று அறிவிப்பு வெளியானது. இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Continue Reading

ரஷியர்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர் புதின்!

ரஷிய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடுவது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதின், தன்னிடம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார். பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்ததால் உடனடியாக மன்னிப்பு கேட்டார் புதின். “இந்த விலை உயர்வுக்காக நான் […]

Continue Reading

டைக்குவாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி தமிழ் மாணவன்

தெற்காசிய சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் இரத்தினபுரியைச் சேர்ந்த எம்.கவிந்து பிரசாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற டைக்குவாண்டோ போட்டியிலேயே அவர் இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். இரத்தினபுரி – ஹிதல்லென்ன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.கவிந்து பிரசாத், பிளக் மாஸ்டர் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இலங்கை டைக்குவாண்டோ சம்மேளனம் மற்றும் சர்வதேச டைக்குவாண்டோ சம்மேளனம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த டைக்குவாண்டோ மனிதநேய மன்றத்தின் ஆசிய வலய கிளையுடன் இணைந்து […]

Continue Reading

குவைத் தலைவர் ஷேக் நவாப் அல் அகமது காலமானார்

குவைத்தின் தலைவர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணெய் வள நாட்டை வழிநடத்தினார். ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும் துக்கத்துடனும் இரங்கல் தெரிவிக்கிறோம். அறிவிப்பைத் தொடர்ந்து சேனலில் வழக்கமான நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Continue Reading

நாடாளுமன்றில் ஆவேச பேச்சு நாடாளுமன்ற உறுப்பினர் மாரடைப்பால் பலி!

அங்காரா துருக்கி நாடாளுமன்றில், ஆளுங்கட்சியின் இஸ்ரேல் ஆதரவு போக்கை கண்டித்து ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். மேற்காசிய நாடான துருக்கியில், ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களது அண்டை நாடான, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையிலும், இஸ்ரேலுடன் துருக்கி வர்த்தக உறவை பின்பற்றி வருகிறது. இது தொடர்பாக எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து […]

Continue Reading

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கும் கடற்படை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் கடற்படையின் நிவாரண குழுக்கள் ஈடுபட்டுள்ளன .  அனுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகின்றது .  அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பிரதேசத்தில் மா ஓயா பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  மேலும், மோசமான காலநிலையினால் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான மேலதிக ஆயத்தப்படுத்தல்களை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி […]

Continue Reading

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில்!

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு […]

Continue Reading

2025 சாம்பியன்ஸ் டிராபியை நாங்கள்தான் நடத்துகிறோம்: ஒப்பந்தம் கையெழுத்தானது என பாகிஸ்தான் அறிவிப்பு

2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐ.சி.சி. பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் […]

Continue Reading

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வெள்ளிக்கிழமையுடன் அப்பதவியிலிருந்து விடைபெற்றிருப்பதுடன், அடுத்ததாக அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். கோபால் பாக்லே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகக் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவரது காலப்பகுதியில் இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் பல்வேறு ‘மைல்கல்’ அடைவுகள் எட்டப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் அவரது […]

Continue Reading

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி கல்லால் அடித்து கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (35). இவர் வெளியூரில் போர் போடும் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார். ராமரிடம் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் நானும் உன்னுடன் வேலை வருகிறேன் எனக்கு முன் பணம் வாங்கித் தருமாறு ராமரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து ராமர் தான் வேலை பார்க்கும் போர்வெல் நிறுவனத்திற்கு கண்ணனை அழைத்து சென்று முன் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட […]

Continue Reading