அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 23 சதமாக காணப்பட்டது. அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 50 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை […]

Continue Reading

இலங்கைக்கு வர அனுமதி கோரும் மற்றுமொரு சீனக்கப்பல்

எதிர்வரும் ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இந்த நாட்டிற்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. ”Xiang Yang Hong 03” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் […]

Continue Reading

பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையை செய்த […]

Continue Reading

இடைக்கால குழுவுக்கு எதிரான ஷம்மியின் மனு முடிவுக்கு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று (15) முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் நியாயமான சட்டத் தேவை ஏற்பட்டால், மனுவை திரும்பப் பெற மனுதாரர்களுக்கு உரிமை அளித்து, மனு மீதான விசாரணையை முடித்து வைக்கும் என நீதிமன்ற குழாம் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண […]

Continue Reading

சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சிறிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.62 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.61 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.41 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

Continue Reading

சீன கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம்!

பசுமை திட்டமிடல் வலயங்களை உருவாக்குவதற்கு சீன கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முதலீட்டு வலயங்களும் பசுமை முதலீட்டு வலயங்களாக மாற்றப்படும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த வருட இறுதிக்குள், சீன கல்வி நிறுவனத்தின் மூலம் மூன்று முதலீட்டு வலயங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பசுமை திட்டமிடல் வலயங்களாக மாற்றப்படும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் கிளிநொச்சி

கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக சேகரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக நீர் வருகை காரணமாக இன்று அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று (15) 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டது. இதேவேளை இரணைமடு குளத்தில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் சில மாயமாகியுள்ளதுடன், வலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் […]

Continue Reading

உலக வங்கியிடமிருந்து கடனுதவி

ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், உலக வங்கியினால் 34 மில்லியன் டொலர் கடனுதவி திறைசேறிக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கியிடமிருந்து மேலும் 20 மில்லியன் டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளதாக அதன் திட்டப் பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.. இந்த திட்டத்தின் முடிவுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நிதியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

Continue Reading

மீண்டும் ஆரம்பமாகும் பொதுமக்கள் தினம்!

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும், பொதுமக்கள் தினம் அமுல்படுத்தப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகள் தோறும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளில், ஏற்படும் தேவையற்ற அசௌகரியங்கள், கால தாமதம் உள்ளிட்ட முறைப்பாடுகளை, இந்த பொதுமக்கள் தினத்தில் பதில் பொலிஸ்மா […]

Continue Reading

உடவலவ அணைக்கட்டு ஊடான வீதிக்கு பூட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக உடவலவ அணைக்கட்டு ஊடாக உள்ள வீதி இன்று (15) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பல கட்டங்களாக குறித்த வீதி மூடப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் 22 ஆம் திகதி வரை வீதி முழுமையாக மூடப்படும் என்பதோடு டிசம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 6 ஆம் திகதி வரை அதன் ஒரு வழிப்பாதை மூடப்படவுள்ளது. […]

Continue Reading