ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது

365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவின் […]

Continue Reading

பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

லாகூர்:06 பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

விசித்திரமான காதல் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு. இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர் என்று தன்னை கருதி உள்ளார். மேலும் அங்குள்ள பெண்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கருதி உள்ளார். இந்த விசித்திரமான காதல் நோய் அறிகுறி முற்றி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் அந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக […]

Continue Reading

தவறுதலாக அழுத்திய பொத்தான் மூலம் பெண்ணுக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு

லாட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை வென்ற பெண்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தவறுதலாக பொத்தானை அழுத்தி ரூ.8 கோடி பரிசு வென்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க். இந்த பெண் கடந்த மாதம் 18-ந்தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க பிளாஸ்பெர்க் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு […]

Continue Reading

இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற அமெரிக்கருக்கு 22 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Continue Reading

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்தினார் மார்க் ஜுகர்பெர்க்

வாஷிங்டன்:06 உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் […]

Continue Reading

ஆண்டர்சனுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய ரிஷி சுனக்

லண்டன்:06 இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார். இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர். இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக். இதுதொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது […]

Continue Reading

ரஷ்யாவின் 6 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் 6 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. அத்துடன் தெற்கு ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது உக்ரைன் ஆளில்லா விமான கருவி தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் 20 பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பில் ரஷ்யா எந்த கருத்தையும் இதுவரையில் முன்வைக்கவில்லை. எவ்வாறாயினும் உக்ரைன் தரப்பிலிருந்து 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமான கருவி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

ஆஸ்திரேலியாவில் கனமழை: மோசமான வானிலையால் 100 விமானங்கள் ரத்து

கான்பெரா,06 ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரெட்பெர்ன் ரெயில் நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன. எனவே அங்கு ரெயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. […]

Continue Reading

ரோகித் ஆரஞ்சு தொப்பியை வெல்ல கூட வாய்ப்பு உள்ளது- ஸ்ரீசாந்த்

மும்பை:06 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது. இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் […]

Continue Reading

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கொலை செய்யும் இந்திய உளவு அமைப்பு- பரபரப்பை கிளப்பிய இங்கிலாந்து நாளிதழ் செய்தி

லண்டன்,06 பாகிஸ்தானில் பதுங்கியபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளை, இந்திய உளவாளிகள் குறிவைத்து கொன்று வருவதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ உளவாளிகள் இதற்கான ரகசிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அரங்கேற்றுவதாகவும் கார்டியன் கூறியிருந்தது. 2020-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதிகள் படுகொலைகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செயல்படும் ‘ரா’ கிளை, பாகிஸ்தானின் இந்திய ஸ்லீப்பர் செல்கள், மற்றும் உள்ளூர் […]

Continue Reading

அமெரிக்காவின் நியூ ஜெர்சி, நியூயார்க் நகரங்களில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின. நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி […]

Continue Reading