தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள் பற்றாக்குறை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய்நாட்டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறித்த தெளிவுடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் எமது மரபுகளையும் பாரம்பரியங்களையும் பேணி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும், இலங்கை பொறியியலாளர்களின் திறமை, இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறன்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த கடந்த 45 வருட காலப்பகுதியில் பொறியியல் மத்திய ஆலோசனை பணியகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.