பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

முக்கிய செய்திகள் 2

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் உரிய வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்;களுக்கான புலமைப் பரிசில் தொகையை வழங்குவதும் உயர்ந்த திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளைக் கொண்ட பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பையும் வழங்குவது புலமைப்பரிசில் பரீட்சையின் நோக்கங்களாகும். இந்த பரீட்சையின் மூலம் வருடாந்தம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது

கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வினாப்பத்திரத்தில் 35 புள்ளிகளை அல்லது அதற்கு மேலான புள்ளிகளைப் பெற்று மொத்தமாக 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என்று கூறும் வகையிலான சான்றிதழ் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.