இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் திடீரென தீ!

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.