யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை மறைமுகமாக எச்சரித்தார் ஜனாதிபதி (Photos)

செய்திகள் முக்கிய செய்திகள் 2

உலகில் மிகப் பழமையான தமிழ் மொழியின் மூலம் இன ஐக்கியத்தினையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் தெரிவித்தார்.

தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த பல தசாப்தங்களை பார்க்கும் போது, மிகநேர்த்தியான விவசாயம் யாழ்ப்பாணத்தில் விவசாயம் என சொல்வது பலவித வேதனைகளையும், எதிர்பார்ப்புக்களும் பாராது யாழ்ப்பாணத்து விவசாயிகள் உள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற வகையில் நாட்டில் உள்ள போராட்டங்கள் பற்றி தெரியும் ஜனநாயக அம்சம். இந்த நாட்டின் பிரச்சினைகளும் தீர்;க்க தான் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். தேசிய நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். ஏழ்மை இல்லாமல் செய்யவேண்டும். 2107 வறுமை ஒழிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தி, அடுத்த தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

கறுப்பு கொடியினை காட்டிகொண்டு உரத்துச் சத்தம் இட்டது எனக்காக என்று எண்ணினேன். ஏன் கறுப்பு கொடி காட்டி சத்தம் போடுகின்றீர்கள் என கேட்டேன். அவர்களின் பிரச்சினையை சொன்னார்கள். பிரச்சினை எமது வேண்டுகோளை இப்போதே நிறுத்தி வையுங்கள். எந்த பிரச்சினை இருந்தாலும், பேசி தீர்க்க வேண்டும். வடக்கு எந்த மாகாணமாக இருந்தாலும், முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாது. வன்முகைளை ஏற்படுத்த கூடாது. இந்த நாட்டில் இனி எந்த விதத்திலும் யுத்தம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது. ஏழை மக்கள் தான் .அதில் சிங்களம் முஸ்லிம் தமிழ் என்ற பிரச்சினை இல்லை. எப்போதும், உயர்த்த வேண்டியது கறுப்பு கொடி அல்ல. சமாதானத்தினை ஏற்படுத்தும் வெள்ளைக்கொடி, அதாவது ஒவ்வொரு விரோதங்களை ஏற்படுத்தினால், யார் சக்தி பெறுகின்றார்கள் என தெரியுமா? எல்லா இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த தான் நான் செயற்பட்டு வருகின்றேன். போட்டி குரோதமின்றி வாழ வேண்டுமென்று தான் நான் செயற்படுகின்றேன். என்னைப் பலவீனப்படுத்தினால், பெரிய பேய் தான் என கூறி வைக்க விரும்புகின்றேன் - என்று தெரிவித்தார்.