எரிபொருள் விநியோகத்துக்காக சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ள […]

Continue Reading

பொதுச் செயலாளர் விவகாரம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சர் மஹிந்த அமரவீரவை அல்லது திலங்க சுமதிபாலவை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக தம்மை அங்கீகரிக்குமாறு திலங்க சுமதிபால அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். அதனையடுத்து, தாமே சுதந்திரக் […]

Continue Reading

இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறை

இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறையில் சென்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கல்வி சேவை உத்தியோகத்தர்களின் ஐக்கிய தொழிற்சங்க சங்கத்தின் செயலாளர் சவனதிலக்க கஜதீர தெரிவித்தார்.

Continue Reading

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபா பெறுமதி பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. அதன்படி, 2023 மே 19 வரையான காலப்பகுதியில் ஜப்பானிய யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.1% ஆகவும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும்போது 15.4% ஆகவும், யூரோ […]

Continue Reading

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். […]

Continue Reading

எனது உயிருக்கு அச்சுறுத்தல்! – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது.ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன். இப்போது நான் இங்கு இருக்கும்போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக […]

Continue Reading

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு!

கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

Continue Reading

சூரிய மின்சாரத்தில் இயங்கும் பொது போக்குவரத்து சேவையை தொடங்குவேன்! அமைச்சர் பந்துல

“சிறகு இல்லாமல் பறக்கச் சொல்கிறார்கள், ஆனால் நான் 2030 இல் சூரிய மின்சாரத்தில் இயங்கும் பொது போக்குவரத்து சேவையை தொடங்குவேன்” என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பசறை பல்கஹதென்ன ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் வருடாந்த தலைவர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இனிமேல் புதைபடிவ எரிபொருளில் வாகனங்கள் இயங்க முடியாது, சுற்றுச்சூழலும் அழிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை விற்பனை மூலம் 1.4 […]

Continue Reading

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். கடந்த மே மாதம் 7ம் திகதி பசில் ராஜபக்ச டுபாய் சென்ற நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கடந்த 19ஆம் திகதி நாடு திரும்பியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கான முக்கிய வாக்கெடுப்பும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் […]

Continue Reading

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுள்ளது – கணேசன் விக்னராஜா

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவிகள் மூலம் இலங்கை அதன் முடங்கியிருந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொருளாதார ஆய்வு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான திணைக்களத்தின் ஆலோசகர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார் லண்டனில் உள்ள வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் அதிக கடனை சுட்டிக்காட்டி, தவறான பொருளாதார கொள்கையென விமர்சித்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு எச்சரிக்கையான படிப்பினைகளை […]

Continue Reading

நுவரெலியாவில் விறகு வெட்ட சென்றவர் மாயம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலியா தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார். நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர். இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது […]

Continue Reading

வடமாகாண ஆளுநர் சாள்ஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Continue Reading