புகையிரதத்தில் பாய்ந்து பெண் தற்கொலை

மாதம்பே, மார்ச் 03 மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரதத்தில் பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

5 திகதி முதல் தடையில்லா மின்சாரம்: காமினி லொகுகே

கொழும்பு, மார்ச் 03 வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய மூடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

யுத்த வெற்றியின் பின்னர் இனவாதம் தீவிரம்: நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டு

கொழும்பு,மார்ச் 03 யுத்த வெற்றியின் பின்னர், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் பதிலாக , அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பொதுவாக சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெடன் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டினார் இலங்கைக்கும் மாலைதீவிற்கும்மான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லிடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் […]

Continue Reading

வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை நாளை மேற்கொள்ளப்பட மாட்டாது என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை, நடைபெற்று வரும் நிறைவுகாண் தொழில்நுட்பவியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 03.03.2022 அன்று மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உக்ரைனின் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன், மார்ச் 02 ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்ய போரில் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோன்று கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது தாக்குதலை உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராசென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த ஏவுகணை தாக்குதலால் அருகில் […]

Continue Reading

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இம்முறை அமரர் தில்காந்திக்கு

யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. மொனராகலையில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்தி யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் கல்விகற்று ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அண்மையில் […]

Continue Reading

கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றருக்கு அணிவகுத்துள்ள ரஷ்யப் படைகள்

உக்ரைன், மார்ச் 02 உக்ரைனின் தலைநகர் கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றர் தொலை தூரத்திற்கு ரஷ்யப் படையினரின் இராணுவ வாகனங்கள் தொடரணியாக நீண்டு காணப்படுவதாக மாக்சார் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தொடரணியில் கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள், டிரக் வாகனங்களும் காணப்படுகின்றன. தெற்கு பெலாரஸில் தரைப்படைகள். தரைவழி தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவுகளின் வரிசைப்படுத்தப்பட்டதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டியது. ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது ஷெல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  நேற்று […]

Continue Reading

இலங்கை விமானப்படை 71ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும்

கொழும்பு, மார்ச் 02 இலங்கை விமானப்படை தனது 71ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் புதன்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைய இவ்வருட பாரம்பரிய கொண்டாட்டமானது இலங்கை விமானப்படைத் தளமான கட்டுநாயக்கவில் விமானப்படைத் தளபதியின் பரிசீலனையில் நடைபெற்றது. இலங்கை விமானப்படையானது 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி Royal Ceylon Air Force என ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக […]

Continue Reading

மேலும் இரு டீசல் கப்பல்கள் இலங்கை வருகை

கொழும்பு, மார்ச் 02 டீசலை ஏற்றிய இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும்(03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார். மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் கூறினார். குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் […]

Continue Reading

மீண்டும் போராட்டத்தில் சுகாதார தொழிற்சங்கம்

யாழ்ப்பாணம், மார்ச் 02 சுகாதார ஊழியர்கள் இன்று மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

குற்றச்சாட்டுகளுக்கு ஜீ.எல்.பீரிஸ் உரிய பதில் வழங்குவார்: நீதியமைச்சர்

கொழும்பு, மார்ச் 02 ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் உரிய பதில் வழங்குவார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு அலி சப்ரி கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்தே, இந்த மாநாடு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டதுள்ளது. எனினும், ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடப்படும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் உரிய பதிலளிப்பதற்கு தயார். […]

Continue Reading

மின்சாரம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

கொழும்பு,மார்ச் 02 மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இன்றைய தினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading