எரிவாயு இறக்குமதி செய்வதில் சிக்கல்

கொழும்பு, மார்ச் 03 வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இறக்க முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், லிட்ரோ எரிவாயு விநியோகம் தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட […]

Continue Reading

தேசிய கால்பந்தாட்ட வீரரின் உடலம் இலங்கை வந்தடைந்தது

கொழும்பு, மார்ச் 03 மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸின் உடலம் இன்று (3)அதிகாலையில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது உடலை பெறுவதற்காக அவருடைய துணைவியார், குடும்பத்தினர் சென்றுள்ளனர். இன்னும் சில மணித்தியாலங்களில் அவருடைய உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட உள்ளது. […]

Continue Reading

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.51 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை பக்தர்கள் […]

Continue Reading

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

கொழும்பு, மார்ச் 03 நாட்டில் உள்ள அரச,  தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை ATM CARD வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக அட்டை ATM CARD காலாவதியான நிலையில் புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாததாலும், புதிய அட்டைகளைப் ATM CARD பெற முடியாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக,வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்கில் […]

Continue Reading

உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும்: ஐ.நா. கவலை

ஜெனீவா, மார்ச் 03 ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை வெளியிட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷபியா மண்டூ கூறுகையில், ‘கடந்த 1-ம் திகதி (செவ்வாய்க்கிழமையில்) இருந்து மட்டுமே […]

Continue Reading

மின்வெட்டு நேரங்களில் திருட்டுச் செயல்கள் அதிகரிப்பு

கொழும்பு, மார்ச் 03 மின்சார துண்டிப்பின் போது கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமெராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்கரித்துள்ளன. பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விகாராதிபதியின் அலுவலக அறையிலள்ள தங்க தாயத்து மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடர்களால் அபகரித்துச் […]

Continue Reading

உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

உக்ரைன், மார்ச் 03 உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த […]

Continue Reading

புகையிரதத்தில் பாய்ந்து பெண் தற்கொலை

மாதம்பே, மார்ச் 03 மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரதத்தில் பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

5 திகதி முதல் தடையில்லா மின்சாரம்: காமினி லொகுகே

கொழும்பு, மார்ச் 03 வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய மூடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

யுத்த வெற்றியின் பின்னர் இனவாதம் தீவிரம்: நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டு

கொழும்பு,மார்ச் 03 யுத்த வெற்றியின் பின்னர், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் பதிலாக , அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பொதுவாக சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெடன் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டினார் இலங்கைக்கும் மாலைதீவிற்கும்மான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லிடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் […]

Continue Reading

வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை நாளை மேற்கொள்ளப்பட மாட்டாது என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை, நடைபெற்று வரும் நிறைவுகாண் தொழில்நுட்பவியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 03.03.2022 அன்று மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உக்ரைனின் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன், மார்ச் 02 ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்ய போரில் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோன்று கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது தாக்குதலை உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராசென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த ஏவுகணை தாக்குதலால் அருகில் […]

Continue Reading