இலங்கையில் குறைந்து செல்லும் covid-19 மரணங்கள்

இலங்கையில் மேலும் 51 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் எனது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ( 26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், 22 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

வாழைச்சேனை இந்துக்கல்லூரி 05 மாணவர்களுக்கு 9ஏ

கல்குடா வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று கோட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 05 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 02 மாணவர்கள் 8ஏ, (தொகுதிப்பாடங்களுக்கான செயற்முறை நடைபெறவில்லை – Non finalized ) பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை முதல்வர் ச.கு.கமலசேகரன் தெரிவித்தார். கல்லூரியில் 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஜெகதீஸ்வரன் அக்ஷித்தா, புஸ்பராஜா சதுர்ஷன், ராஜேந்திரன் ரிலக்ஷன், றொபேர்ட்கரன் பிரஜீத் பிரனீஷ், […]

Continue Reading

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி சுகாதார அமைச்சுக்கு!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சுகாதார அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த ஆண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படாது என்று சுகாதார அமைச்சர் கூறினார். கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Continue Reading

சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு

கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்து உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திஸாநாயக்க, சொத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநகர சபையின் கீழ் சொத்துகளை பதிவு செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்கள் பற்றிய தகவல்களை நகரவாரியாக பெற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 79 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 38 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

அறிவிக்கப்பட்டபடி யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்நிலை வாயிலாக நடைபெறும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாத் தொடர்பில் தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு விபரிக்கும் போதே கலாநிதி கே. […]

Continue Reading

யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 350 கிலோ மஞ்சள் மீட்ப்பு

யாழ்.குருநகா் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட சுமாா் 350 கிலோ மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.குருநகா் – ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் அதனை பின்தொடர்ந்தபோது படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கின்றனா். இதனையடுத்து கடற்படையினா் படகினை சோதனையிட்டபோது அதில் மஞ்சள் இருப்பது அவதானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.-40

Continue Reading

கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு மாணவர்கள் கோரிக்கை

கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கடந்த வருடங்களில் யாழ் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்த குறித்த சிறப்புக் கற்கை நெறி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று(20.09.2021) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது. இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாணவர் பிரதிநிதிகள், […]

Continue Reading

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை கடமைகள் தொடர்பில் ஆசிரியர்களின் நிலைப்பாடு

செப்டம்பர் 15 க்கு முன்னர் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால் உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை கடமைகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Continue Reading

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா

அமைச்சர் சமல் ராஜபக்சவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய அமைச்சரவை அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பந்துல குணவர்தனா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். கடந்த காலங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

யாழில் கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த (50 வயது) பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த (63 வயது) ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த (81 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த […]

Continue Reading

முன்னாள் தமிழ் வானொலி அறிவிப்பாளர் கைது

முன்னாள் வானொலி அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading