திருமலையில் விபத்து: இருவர் பலி

திருகோணமலை, மார்ச் 01 திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார். ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் இன்று (01) மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கோவில் திருவிழாவில் திருட்டு: 9 பெண்கள் சோதனையில் ஈடுபடுத்தி நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம், மார்ச். 01 யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்துஆலயத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த […]

Continue Reading

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களை தெரியப்படுத்தவும்: மத்திய வங்கி

கொழும்பு, மார்ச் 01 வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள மத்திய வங்கி, இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான நிலையங்கள் அல்லது நபர்கள் தொடர்பில் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் 0112 39 88 27, […]

Continue Reading

வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடர் ஆரம்ப நிகழ்வின் பதிவுகள்

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ நிகழ்வு இடம் பெற்றது. இந்த சுற்றுத்தொடருக்கு பிரதம விருந்திராக பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் கலந்து கொண்டதுடன், கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன், யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கலந்து கொண்டனர். இதற்கு RS Auto Pvt Ltd மற்றும் Lanka Wings Pvt Ltd நிறுவனங்கள் அனுசரனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது […]

Continue Reading

ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து: உபுல் ரோஹன

கொழும்பு, மார்ச் 01 நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொரோனா வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புள்ளிவிபர ரீதியாக கொரோனா தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை […]

Continue Reading

ஊடகவியலாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, மார்ச் 1 மட்டக்களப்பு – வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவப்பிரதீபன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை எதிர்வரும் 04.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸார் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 04.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை […]

Continue Reading

குடும்பதகராறு: மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

மொனராகலை, மார்ச் 01 தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

எண்ணெய் கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை: உதய கம்மன்பில

கொழும்பு, மார்ச் 01 எண்ணெய் கொள்வனவுக்காக டொலரை தொடர்ச்சியாக வழங்க நிதி அமைச்சு உறுதியளித்திருந்தபோதிலும், அது தற்போதுவரை நடைமுறையாகவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னுரிமையை அறிந்துகொள்ள வேண்டும் என அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக உதய கம்மன்பில கூறியதாவது, கடலில் எண்ணெய் கப்பல்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனினும் அதனை விடுவிப்பதற்கு டொலர் இல்லை. தொடர்ச்சியாக கப்பல்களுக்கு, உரிய நேரத்தில் பணத்தை வழங்கி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால், இருப்பிலுள்ள […]

Continue Reading

உக்ரைன், ரஷ்ய பிரஜைகளுக்கு இலங்கையில் வீசா நீடிப்பு

கொழும்பு, மார்ச் 01 இலங்கையில் உள்ள ரஷ்ய, உக்ரைன் பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

ஜெர்மன் தூதரக அதிகாரி – யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணம், மார்ச் 01 இலங்கைக்கான ஜெர்மன் தூதரக அதிகாரி நீக்கிளாஸ் – யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும் சமகால நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Continue Reading

கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 2024இல் நிறைவடையும்

கொழும்பு, மார்ச் 01 கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்படி, 2024 ஆம் ஆண்டு இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கையகப்படுத்தப்பட்டுள்ள 90 சதவீத காணிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதுவும் விரைவில் நிறைவடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Continue Reading

6 இலங்கையர்கள் பாதுகாப்பாக போலந்தில் தஞ்சம்

போலந்து, மார்ச் 01 யுத்தம் காரணமாக உக்ரைனில் நிர்க்கதியாகியுள்ள ஆறு இலங்கையர்கள் போலந்தை வந்தடைந்துள்ளனர் என அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுள், இலங்கை செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாணவி ஒருவரை, இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக, உக்ரைனின் நிலைமை அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து தரை மார்க்கமாக 37 இலங்கையர்கள் போலந்தை வந்தடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், […]

Continue Reading