இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக […]

Continue Reading

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் ஸ்மிரிதா மந்தனா 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதனை அடுத்து 117 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 97 […]

Continue Reading

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் […]

Continue Reading

ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.73 ஆகவும் விற்பனை விலை 329.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Continue Reading

இலங்கை அணிக்கு 117 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான இறுதி கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதற்கமைய இலங்கை அணிக்கு 117 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சசித்ரவுக்கு பிணை

ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. எனினும் சந்தேகநபரான சசித்ர சேனாநாயக்கவின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நாளை (26) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் கடன் தவணை தொடர்பான மீளாய்வு இங்கு நடத்தப்பட உள்ளது. இந்தக் கலந்துரையாடல் தொடர் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை குறித்தும் விவாதிக்கப்படும். அதன் பின்னர் […]

Continue Reading

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட நுழைவுத் தேர்வுக்கான முடிவுத் திகதி நீடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அகுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுள் குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசே […]

Continue Reading

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்காவும் கவலை

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை ஒரு நடுநிலை நாடு என்ற வகையில், தமது பிராந்தியத்தில் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நிலையான நடைமுறையை தாம் வகுத்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி அவருக்கு விளக்கமளித்தார். இந்த அணுகுமுறையை அனைத்து நாடுகளுக்கும் சமமாகவே இலங்கை நடத்துகின்றது […]

Continue Reading

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை – கர்தினால் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய புனித மைக்கல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார். தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டால், அரசியல் அழுத்தத்தின் கீழ் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், சர்வதேசத்திற்கு செல்ல […]

Continue Reading

இலங்கை பன்றிகள் மத்தியில் “நிபா” வைரஸ்?

நிபா வைரஸ், நாட்டிலுள்ள பன்றிகளில் பரவும் அபாயம் காணப்படுகின்றதா என்பது குறித்து ஆராய தீர்மானித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவும் சாத்தியம் மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்த வைரஸ் பன்றிகளின் ஊடாக பரவும் அபாயம் உள்ளமையினால், பன்றிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிபா வைரஸ், இந்தியாவின் கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் […]

Continue Reading

அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. […]

Continue Reading