பதுக்கிய பணத்தை மீட்டால் வரி வசூலிக்க தேவையில்லை: இலங்கை முன்னாள் அதிபர்

இலங்கையில் ராஜபக்சேக்கள் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார். Also Read – இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு ராஜபக்சேக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள […]

Continue Reading

பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத வாகனங்களுக்கு தடை

தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்தி மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் பயன்படுத்துவதற்கும் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மோட்டார் […]

Continue Reading

இந்தியாவில் லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி 2பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை- திருச்சி 4 வழிச்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

காசாவில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஹமாஸை ஒழிப்பதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளித்தாலும் காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு 19 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு […]

Continue Reading

பெல்ஜியம் – இலங்கை பாராளுமன்ற தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு

பெல்ஜியம் மற்றும் இலங்கை பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர். பெல்ஜியத்துக்கான இலங்கை தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் மற்றும் பெல்ஜியம்  இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அலெஸியா க்ளேஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு (14) வியாழக்கிழமை ப்ருசேல்ஸில் நடைபெற்றது.  தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், பிரியாவிடை வழங்கும் விதமாக நடைபெற்ற இச்சந்திப்பில் பெல்ஜியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பாராளுமன்றத் தொடர்புகளை மேம்படுத்துவது […]

Continue Reading

சுவிட்ஸிலிருந்து நாடு கடத்தபட்ட 02 தமிழ் குடும்பம்!

கடந்த மாதம் மாத்திரம் சுவிட்சர்லாந்து அதிகாரிகள், இரண்டு தமிழ் குடும்பங்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர் இந்தநிலையில் நாடுகடத்தலின் போது அதிகாரிகளின் தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள் முகாமில் இருந்து காவல்துறையினரால் முன்னறிவிப்பின்றி அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கான விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார் இந்தநிலையில் சுவிட்சர்லாந்து தடுப்புக்காவலில் இதுவரையில் மூன்று உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நகுலேஸ்வரன் விஜயன் […]

Continue Reading

ஹமாஸின் தவறினால் கொல்லப்பட்ட பணயக்கைதிகள்!

காசாவில் தங்களது தரப்பினர் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 22, 26 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷேஜாயா பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தரப்பினரால் நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் காணாமல் போயுள்ளவர்களை கண்டறிவதும் சகல பணயக் கைதிகளையும் மீட்பதே தங்களது பிரதான நோக்கமாகும் என இஸ்ரேல் பாதுகாப்பு […]

Continue Reading

இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது: புதின் சூளுரை

உலகின் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக கருதப்படும் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.மாறாக போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஆண்டு இறுதி செய்தி மாநாட்டில் பேசிய அதிபர் புதின், ” போரில் வெற்றி நமதாக இருக்கும். நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும்போது […]

Continue Reading

கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் விபரம்

இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளிள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல்-காசா இடையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பான செய்திகள் முதல் இடத்தில் […]

Continue Reading

பாலியல் வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வுக்கு 25 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு […]

Continue Reading

டெஸ்ட் தொடர்- தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட ரோகித் சர்மா

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளன. ஒருநாள் தொடர் 17-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் […]

Continue Reading

தோனியின் 7ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு?

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் 7ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது சீருடைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஓய்வு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினை கௌரவிக்கும் வகையில் அவரது 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், 10ஆம் இலக்க சீரடையை இந்திய வீரர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. இந்தநிலையில், […]

Continue Reading