ஹட்டன் பிரதான வீதியில் விபத்து: 9 பேர் காயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியின் பின்னவல இரட்டை வளைவு பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் வேன் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வீரகெட்டிய பகுதிக்கு செல்லும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த ஒன்பது பேரும் காயமடைந்த நிலையில், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பின்னவல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.