படையினர் மீது கைவைக்க அனுமதியில்லை – ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எந்தவொரு தரப்பினராயினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொரளை, ஹெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்ததுடன், சங்கீத நாட்காலி போட்டிக்கோ, விநோத போட்டிகளுக்காகவோ தாம் ஒன்றிணைந்த கூட்டு அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இது எமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சினை என்ற போதிலும், இந்த விடயத்தில் எனது நாட்டினர் மீது எவருக்கும் கைவைக்க அனுமதிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள அதேவேளை, 66ஆவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் தேசப்பற்றாளர்கள், இன பற்றாளர்கள் மத்தியில் கொண்டாட கிடைத்தமையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.