பெற்றோலைப் பகிர முடியாதவர்கள் அதிகாரத்தை எப்படிப் பகிர்வார்கள்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பெற்றோலையே பகிர முடியாத அரசாங்கம் அதிகாரத்தைப் பகிர்வது எவ்வாறு என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

நாட்டிற்கு நாளாந்தம் 2500 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுவதாகவும், அதனை சேமித்து வைப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளதுடன், யுத்த காலத்தில்கூட இதுபோன்றதொரு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டணியாக போட்டியிடவுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக நவம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் பாரிய பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரோஹித்த அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.