மீண்டும் மழை

செய்திகள்

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளைய தினங்களில் மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கமைய நாட்டின் பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடனான மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையிலான கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரையில் அதிகரித்து வீசும் எனவும், குறித்த பகுதியில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.