நெல்சன் மண்டேலா பேத்தி புற்று நோயால் மரணம்

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா […]

Continue Reading

இலட்சக் கணக்கில் பண மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்? பரபரப்பு புகார்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறைக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஏ.ஆர்.ரகுமான் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் இந்த புகாரை கொடுத்துள்ளனர், கொடுத்துள்ள இந்த புகார் மனுவில்… “கடந்த 2018 ஆம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூபாய் 29.50 லட்சம் பணத்தை முன்பணமாக ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக்கொண்டார். பின்னர் மாநாடு நடத்த […]

Continue Reading

நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்க கூடாது: எலான் மஸ்க்

2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர். இந்நிலையில், கொரோனா […]

Continue Reading

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கை ஏற்பு

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார். கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் […]

Continue Reading

சுற்றுலாப் பயணிகளிடம் அதிக தொகை அறவிடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சுற்றுலா […]

Continue Reading

முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை: IMF

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Continue Reading

இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்கின்றோம் – தசுன் சானக்க

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண தொடருக்காக நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி பயணமாகியுள்ளது.

Continue Reading

உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு காயத்தால் ஹசரங்கா நீக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மீளாததால் அவர் அணியில் இடம் பெறவில்லை. லங்கா பிரிமீயர் லீக்கில் ஆல்-ரவுண்டராக அட்டகாசப்படுத்திய ஹசரங்கா (279 ரன் மற்றும் 19 விக்கெட்) இல்லாதது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். கேப்டனாக தசுன் ஷனகா நீடிக்கிறார். குசல் மென்டிஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி வருமாறு:- ஷனகா (கேப்டன்), குசல் […]

Continue Reading

இலங்கைக்கு வரும் சீன உளவு கப்பல்: அமெரிக்கா கவலை

சீனாவின், ‘ஷி யான் 6’ என்ற ஆய்வு கப்பல் அடுத்த மாதம் (அக்டோபர்) இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா இத்தகைய ஆய்வு கப்பல்களை ஆராய்ச்சிகாக அனுப்புவதாக கூறினாலும் உண்மையில் அந்த கப்பல்கள் பிறநாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு அனுப்பப்படும் உளவு கப்பல்கள் குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் […]

Continue Reading

இலங்கையால் பிடிக்கப்படும் மீனவர்கள், படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயற்பட்டு வருகிறார்வருகிறார் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் 46 இடங்களில் மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ நடைபெற்றது. இது போல் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் […]

Continue Reading

இந்தியா புறப்பட்டது இலங்கை கிரிக்கெட் குழாம்!

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று இந்தியா நொக்கி பயணமாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் உட்பட 35 பேர் இந்த குழாமில் இடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை குழாமின் தலைவராக தசுன் சானக்க பெயரிடப்பட்டுள்ளதுடன் உப தலைவராக குசல் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, பெத்தும் நிஸ்ஸங்க, குஷல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரட்ன, சதீர சமரவிக்ரம, […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் […]

Continue Reading