ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

ஒவ்கடங்கு,26 ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராணுவ துருப்புகள் களம் இறக்கப்பட்டு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நான்டின் மற்றும் சோரா கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு […]

Continue Reading

தற்போது எரிபொருள் கையிருப்புக்களை ஒரு மாதத்திற்கு பேணி வருகிறோம்: டி.வீ சானக

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார். குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தும் என்றும் அதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க […]

Continue Reading

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: இன்னொரு சந்தேக நபர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறைக் கும்பலொன்று கடத்திச் சென்றதோடு,  கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துவிட்டு, மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் […]

Continue Reading

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார். இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் […]

Continue Reading

இலங்கை விவசாயத்துறைக்கான உதவிகள் மூலம் உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்த எதிர்பார்ப்பு: அமெரிக்கா

ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதற்கான தமது பரந்துபட்ட இலக்கின் ஓரங்கமாக இலங்கையின் விவசாயத்துறைசார் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை வழங்குவதன் ஊடாக நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க விவசாயத்திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாயம்சார் விவகாரங்களுக்கான துணைச்செயலர் அலெக்சிஸ் டெய்லருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார்.  இலங்கையின் விவசாயத்துறைக்கு அமெரிக்க விவசாயத்திணைக்களம் வழங்கிவரும் உதவிகள் குறித்துக் […]

Continue Reading

கபில விக்ரமநாயக்கவின் பிணை கோரிக்கை ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒளடத விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தாம் விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக அவர் நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன், குறித்த நீதிப் பேராணை மனுவின் இடையீட்டு கோரிக்கையாக தமக்கு பிணை வழங்குமாறும் ஒளடத விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க கோரியிருந்தார். […]

Continue Reading

இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் அவர் சொல்லவில்லையாம்: பாதுகாப்பு அமைச்சர்!

உயிர்த்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் இன்று முதன்முறையாக வௌிப்படுத்தினார். குறித்த வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Continue Reading

30 ஆம் திகதி வரை கடும் வெயில்!

நாளை (27) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இவ்வாறு அதிகரிக்கக்கூடும்.   இதன்போது, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், பொது வௌியில் கடுமையான உழைப்பை குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என […]

Continue Reading

நேர்முக பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை?

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. மார்ச் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கமைய, புதிதாக 2053 பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Continue Reading

அமெரிக்க விவசாய துணை செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, […]

Continue Reading

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது. முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தபட்ட இந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.  இந்த நான்கு சந்தேக நபர்களும் 434 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தபோதே முல்லேரியா […]

Continue Reading

நச்சுத்தன்மை போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட  660 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட  660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில்  23 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 66 கிராம் ஹெரோயின், 232 கிராம் கஞ்சா ,  167கிராம் ஐஸ் ,  653 கிராம் கஞ்சா மற்றும் 20 […]

Continue Reading