கடும் வெப்பம்; காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி

நாட்டில் பல பகுதிகளில் ஜனவரி மாதம் முதலே வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்பநிலை வழமை நிலையிலும் பார்க்க உயர் மட்டத்தில் தற்போது காணப்படுகிறது. கடும் வெப்பநிலை சிலருக்கு சிலவேளை பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹொரணை பகுதியில் வெட்ட வெளியில் நிறுத்திவைக்கப்பட்ட காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி கடும் வெப்பதால் வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனவே, கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வெட்ட வெளியில் […]

Continue Reading

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தொடர்பில் விசேட சந்திப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது. இதேவேளை வெளிநாட்டில் இருக்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் திரன் அலஸ் நாடு திரும்பியதுடன் பின்னர் அரச அதிகாரிகளுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஸா வழங்கும் நடைமுறை இந்தியாவிடம் […]

Continue Reading

தங்கத்தின் விலை குறைந்தது!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (3) ஒரு அவுன்ஸ் தங்கம் 684,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,140 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,130 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,050 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,130 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் […]

Continue Reading

மே 7 முதல் 10 வரை நாடாளுமன்றம் கூடுகிறது

மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான […]

Continue Reading

ஏப்ரலில் பணவீக்கம் 1.5 சதவீதமாக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஏப்ரலில் 2.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுடன், மார்ச்சில் 0.5 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தைப் பதிவுசெய்த உணவல்லாப்பணவீக்கம் ஏப்ரலில் 0.9 சதவீதமாக அதிகரித்தது. மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஏப்ரலில் -0.79 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் […]

Continue Reading

நடிகை தமிதா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாட்டு தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சொத்துக்குவிப்பு வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கடந்த 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், தான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் அரசியலுக்கு […]

Continue Reading

பச்சை மிளகாய் விலையில் மாற்றம்

தற்பொழுது பச்சை மிளகாய் ரூபா 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் செலவு செய்வதாகவும், விற்பனை செய்யும் பொழுது 70 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் […]

Continue Reading

காசாவில் சீர்குலைந்த வீடுகளை சீரமைக்க 2040 வரை ஆகும்: ஐ.நா

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவிலும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. தரை தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி […]

Continue Reading

ஐக்கிய அமீரகத்தில் கனமழை- சர்வதேச விமான சேவைகள் ரத்து

துபாயில் கடந்த மாதம் உருவாகிய புயல் காரணமாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால், துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இடியுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. துபாயில் பெய்த மழையைவிட இது […]

Continue Reading

3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 65 ஆயிரம் தேனீக்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள […]

Continue Reading

6 வயது மகனை டிரெட்மில் ஓட வைத்து கொன்ற தந்தை?

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கும் பிரெ மிக்கோலியோ என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்து வந்தார். தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக கூறி, அவனை உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார். அதன்படி கோரெ டிரெட்மில்லில் ஓட துவங்கியுள்ளார். சிறிது நேரத்தில் […]

Continue Reading